பாரதியார் பல்கலை கல்லுாரிகள்; மாணவியர் கபடி துவக்கம்
கோவை: பொள்ளாச்சியில், பாரதியார் பல்கலை மண்டல கல்லுாரிகளுக்கு இடையே, மாணவியருக்கான கபடி போட்டி நடக்கிறது.பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், பாரதியார் பல்கலை மண்டல கல்லுாரிகளுக்கு இடையே, மாணவியருக்கான கபடி போட்டி நேற்று துவங்கியது. கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன், கல்லுாரி நிர்வாக மேலாளர் ரகுநாதன், உடற்கல்வித்துறை தலைவர் அசோக்குமார் ஆகியோர், துவக்கி வைத்தனர்.அதில், பாரதியார் பல்கலை கல்லுாரிகளை சேர்ந்த, எட்டு அணிகள் பங்கேற்றன.முதல் போட்டியாக நிர்மலா கல்லுாரி அணியும், பி.கே.ஆர்., அணியும் விளையாடின. அதில், பி.கே.ஆர்., அணி, 58 - 24 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.இரண்டாம் போட்டியில், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி அணியும், கோவை குமரகுரு கல்லுாரி அணியும் விளையாடின. அதில், என்.ஜி.எம்., கல்லுாரி அணி, 31 - 26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.மூன்றாம் போட்டியாக கோவை ரத்தினம் கல்லுாரி அணியும், பயனீர் கல்லுாரி அணியும் விளையாடின. அதில், ரத்தினம் கல்லுாரி அணி, 36 - 6 என்ற புள்ளி கணக்கில் வென்றது. தொடர்ந்து சிக்கண்ணா கல்லுாரி அணியும், கே.எஸ்.ஜி., அணியும் விளையாடின. அதில், சிக்கண்ணா கல்லுாரி அணி, 40 - 17 என்ற புள்ளி கணக்கில் வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.