உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி; இன்று மாலை வரை முன்பதிவு வரவேற்பு

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி; இன்று மாலை வரை முன்பதிவு வரவேற்பு

கோவை; பள்ளி மாணவ, மாணவியருக்கு நாளை நடக்கும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க இன்று மாலை வரை முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாளை காலை, 8:00 மணிக்கு அண்ணா சைக்கிள் போட்டிகள் கோவைப்புதுார், மின்வாரிய அலுவலகம் முன் துவங்கி, ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியாக மீண்டும் மின்வாரிய அலுவலகம் வந்தடைகிறது.பள்ளி மாணவ, மாணவியருக்கு இப்போட்டி நடத்தப்படுகிறது. 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 15 கி.மீ., மாணவியருக்கு, 10 கி.மீ., 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 20 கி.மீ., மாணவியருக்கு, 15 கி.மீ., 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 20 கி.மீ., மாணவியருக்கு, 15 கி.மீ., போட்டி நடக்கிறது.போட்டியில் பங்கேற்க தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதார் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல்களை இன்று மாலை, 5:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பித்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.முதல் மூன்று பரிசுகளாக ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பரிசுகள் வழங்கப்படுகின்றன. 4 முதல், 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 பரிசு வழங்கப்படும். இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே போட்டியில் பயன்படுத்த வேண்டும். விபரங்களுக்கு, 74017 03489 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ