உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிக் டேட்டா மற்றும் ஏ.ஐ. பல்கலையில் கருத்தரங்கு

பிக் டேட்டா மற்றும் ஏ.ஐ. பல்கலையில் கருத்தரங்கு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை காக்ஸ்பிட் மற்றும் தாவர உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில், பிக் டேட்டா மற்றும் ஏ.ஐ. சகாப்தத்தில், தாவர மரபியல் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. மைஜென் இன்பர்மேடிக்ஸ் நிறுவனர் சுமந்த் முட்டே சிறப்புரையாற்றினார். நவீன உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் ஆய்வுகளில், சிக்கல்களைத் தீர்ப்பதில் புள்ளிவிவரங்களின் முக்கியத்துவம், நடைமுறைப் பயன்பாடு, உயிரியல் தரவுகளை புள்ளிவிவர அணுகுமுறைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. துறைத் தலைவர் அருள், காக்ஸ்பிட் இயக்குனர் செந்தில், இணைப் பேராசிரியர் ஹேமா பிரபா உட்பட பேராசிரியர்கள், இளநிலை உயிரி தொழில்நுட்பவியல் மாணவர்கள், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை