உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிப்பர் லாரி கவிழ்ந்ததில் பைக்கில் சென்றவர் பலி

டிப்பர் லாரி கவிழ்ந்ததில் பைக்கில் சென்றவர் பலி

நெகமம்: பனப்பட்டியில் இருந்து காரச்சேரி செல்லும் ரோட்டில் சென்ற பைக் மீது, லாரி மோதியதில் பைக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெகமம், எம்மேகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ், 28, பால்காரர். இவர், நேற்று காலையில், பனப்பட்டியிலிருந்து காரச்சேரி செல்லும் ரோட்டில் வளைவு பகுதியில் பைக்கில் சென்றார். அப்போது, எதிரில், மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியது. விபத்தில், டிப்பர் லாரி தலைகீழாக கவிழ்ந்து, கனகராஜ் மீது விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே கனகராஜ் இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நெகமம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரி டிரைவர் கோவையை சேர்ந்த அருண், 25, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை