தொழிலாளர் பிரதிநிதி தேர்தல்; பா.ஜ., தி.மு.க., வெற்றி
வால்பாறை; தொழிலாளர் பிரதிநிதி தேர்தலில், பா.ஜ., - தி.மு.க., கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு குரூப் டீ எஸ்டேட். இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இடையே, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு தேர்தலில், தி.மு.க., -- அ.தி.மு.க., -- பா.ஜ., -- கம்யூ., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஈட்டியார் எஸ்டேட்டை சேர்ந்த சுரேஷ் (தி.மு.க.,) வெற்றி பெற்றார். இதே போல், சோலையாறு எஸ்டேட்டில் நடந்த தேர்தலில் கார்த்திக் (பா.ஜ.,) வெற்றி பெற்றார். சோலையாறு பேக்டரியில் முனீஸ்வரன் என்பவர் ஒரு மனதாக போட்டியின்றி, பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார்.