உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீலகிரி எம்.பி., ராஜா மீது பா.ஜ.,வினர் புகார்

நீலகிரி எம்.பி., ராஜா மீது பா.ஜ.,வினர் புகார்

கோவை; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதுாறாக பேசிய நீலகிரி எம்.பி., ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.,வினர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.மனு அளித்த பிறகு பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்., சேகர் கூறுகையில், ''மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து தரக்குறைவாக, அவமானப்படுத்தும் நோக்கில் 2ஜி புகழ் அமைச்சர் ராஜா சென்னையில் நடந்த தி.மு.க., கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அது பொது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, சட்டபூர்வமாக என்ன செய்ய வேண்டுமோ அதை பா.ஜ., செய்யும். தமிழகம் முழுவதும் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்படுகிறது. ''இதற்கு முன், இந்துக்கள் புனிதமாக கருதும் மனுஸ்மிருதி குறித்தும் தவறாக பேசி இந்துக்களுடைய நெஞ்சில் ஈட்டியால் குத்தி இருக்கிறார். அதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.,வினரை கைது செய்தனர். கொலை செய்தவனுக்கு ஊர் அறிய வரவேற்பு, பாதிக்கப்பட்டவருக்கு ஜெயில் என்பது தான் தி.மு.க.,வின் நியாயம். இது நீடிக்காது, பா.ஜ., செய்ய வேண்டியதை செய்யும். ராஜா அவரின் தவறை உணர வைப்போம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை