கெபி ஆசீர்வாத விழாவில் பா.ஜ.,வினர் பங்கேற்பு
வால்பாறை; வால்பாறையில் நடந்த, ஆரோக்கியமாதா 'கெபி', ஆசீர்வாத விழாவில், பா.ஜ.,வினர் கலந்து கொண்டனர்.வால்பாறையில், மாணிக்கா எஸ்டேட் சந்திப்பில் அன்னை ஆரோக்கியமாதா 'கெபி', ஆசீர்வாத விழா நடந்தது. விழாவில் பங்கேற்க அனைத்து மக்களுக்கும் ஜாதி, மத பேதமின்றி அழைப்பு விடுக்கப்பட்டது. விழாவில், வால்பாறை பா.ஜ., மண்டல் பார்வையாளர் தங்கவேல், மண்டல் தலைவர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, கோவை ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் போல் ஆலப்பாட் அவர்களிடம், மாதா ஆலயத்திற்கு கடிகாரம் அன்பளிப்பாக வழங்கினர்.