உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மறைந்த கவர்னருக்கு பா.ஜ., அஞ்சலி 

மறைந்த கவர்னருக்கு பா.ஜ., அஞ்சலி 

பொள்ளாச்சி; மறைந்த கவர்னர் இல.கணேசன் மறைவுக்கு பொள்ளாச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பா.ஜ. முன்னாள் மாநில தலைவரும், நாகாலாந்து கவர்னருமான இல.கணேசன் உடல் நலம் பாதித்து இறந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, கோவை ரோடு மகாலிங்கபுரம் ஆர்ச் அருகே பொள்ளாச்சி நகர பா.ஜ., கட்சி சார்பில் நடந்தது. முன்னாள் மாநில செயலாளர் நஞ்சப்பன், கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், மாவட்ட பொதுச் செயலாளர் துரை, நகர தலைவர் கோகுல்குமார் ஆகியோர் பங்கேற்று, அவரது உருவப்படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை