கூட்டு பாலியல் சம்பவத்தை கண்டித்து பா.ஜ. ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி: கோவையில் மாணவி கூட்டு பாலியல் சம்பவத்தை கண்டித்து, பா.ஜ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சியில் நடந்தது. கோவை தெற்கு மாவட்ட பா.ஜ. சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் துரை, நகர தலைவர் கோகுல்குமார் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் வசந்தராஜன், பாலியல் சம்பவத்தை கண்டித்தும், அரசை கண்டித்தும் பேசினார். மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ், மாநில மகளிர் அணி செயலாளர் அருணாதேவி, இளைஞரணி மாவட்ட தலைவர் செல்வக்குமார் பேசினர். ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் பாலு நன்றி கூறினார். இதில், கோவை கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நீதிக்காக போராடுவோம் என கோஷங்களை எழுப்பினர். தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.