உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சின்னதடாகத்தில் கருஞ்சிறுத்தை; வனத்துறையினர் விசாரணை

சின்னதடாகத்தில் கருஞ்சிறுத்தை; வனத்துறையினர் விசாரணை

பெ.நா.பாளையம்; கோவை வடக்கு பகுதியில் மலையோர கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சின்னதடாகத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் வழியில் சரவணன் வீட்டு அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பது அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவானது.வீட்டின் முன்புறம் வாசல் வழியாக கருஞ்சிறுத்தை கடந்து சென்றது. அப்போது ஆட்கள் யாரும் இல்லாததால், உயிர் சேதம் இல்லை. ஏற்கனவே தடாகம் ரோடு, காளையனுார், திருவள்ளுவர் நகர் ஒட்டிய பகுதிகளில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது சின்னதடாகம் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோவை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை