கருப்பு சட்டை போராட்டம்
கோவை; திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், பணியாளர்களுக்கு விரோதமாக நடந்து கொள்வதாக, தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வன்மையான கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இச்சூழலில், கோவை மாவட்டத்திலுள்ள, 11 தாலுகாக்கள், கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்கள், ஐந்து நகராட்சி அலுவலகங்களில் உள்ள நில அளவையர்கள், கருப்பு சட்டை அணிந்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். நில அளவையர் முகம்மது அலி கூறுகையில், ''மாநில சங்கத்தின் முடிவின் படி எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். அடுத்த கட்ட போராட்டம் குறித்து சங்கத்தலைமை முடிவு அறிவிக்கும்,'' என்றார்.