வழுக்கல் நடைபாதையில் பிளீச்சிங் பவுடர் துாவல்
வால்பாறை; வால்பாறையில், வழுக்கல் நிறைந்த நடைபாதையில் நகராட்சி சார்பில் பிளீச்சிங் பவுடர் துாவப்படுகிறது. வால்பாறையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்கிறது. மழை தொடர்ந்து பெய்யும் நிலையில், பல்வேறு இடங்களில் கால்வாய் கூட இல்லாததால் மழை நீர் நடைபாதை வழியாக செல்கிறது. இதனால் மக்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகள் வழுக்கல் நிறைந்து காணப்படுகிறது. குழந்தைகள் முதல் முதியவர் வரை நடைபாதையில் நடந்து செல்லும் போது, கிழே விழுந்து காயமடைகின்றனர். இதனையடுத்து, வழுக்கல் நிறைந்த பகுதிகளில், நகராட்சி கமிஷனர் கணேசன், துப்புரவு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில், நகராட்சி துாய்மை பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் துாவும் பணியில் ஈடுபட்டனர்.