உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீரில் மூழ்கிய மாணவன் சடலம் மீட்பு

தண்ணீரில் மூழ்கிய மாணவன் சடலம் மீட்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பி.ஏ.பி., கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட கல்லுாரி மாணவரின் உடல், தாசநாயக்கன்பாளையம் அருகே மீட்கப்பட்டது.சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் தரணிதரன்,18. இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து வந்தார்.கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த தரணிதரன் உட்பட, எட்டு மாணவர்கள், கடந்த, 16ம் தேதி கெடிமேடு சென்று, பி.ஏ.பி., கால்வாயில் குளித்தனர். அப்போது, நீச்சல் தெரியாத தரணிதரன், கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்டார். கோமங்கலம் போலீசார் மாணவனை தேடி வந்தனர்.இந்நிலையில், அவரது உடல், தாசநாயக்கன்பாளையம் அருகே, கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை