உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூர் படித்துறையில் மூதாட்டி சடலம் மீட்பு

பேரூர் படித்துறையில் மூதாட்டி சடலம் மீட்பு

தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், தற்போது, சுமார் 3 அடி உயரத்திற்கு நீர் சென்று கொண்டுள்ளது. இப்பகுதியில், நேற்று பகல், சிலர் கை, கால் கழுவுவதற்காக, சென்றுள்ளனர். அப்போது, நீரில், சுமார், 60 வயதுடைய மூதாட்டியின் சடலம் மிதந்துள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பேரூர் போலீசார், உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி