போயர் பேரவை துவக்க ஆலோசனை கூட்டம்
அன்னூர்: கொங்கு போயர் முன்னேற்ற பேரவை துவக்குவதற்கான ஆலோசனை கூட்டம், அன்னூரில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அன்னூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் சந்தோஷ் குமார், ரஞ்சித் குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், விரைவில் பேரவை துவக்குவது, பதிவு செய்வது, என முடிவு செய்யப்பட்டது. பேரவை சார்பில், ஆதரவில்லாத முதியோர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது, ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க உதவுவது, ஆதரவற்றோர் திருமணம், வளைகாப்பு, இறப்பு சடங்கு ஆகியவற்றிற்கு நிதி உதவி வழங்குவது, ஆண்டுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்வது, மருத்துவ முகாம் நடத்துவது, கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.