உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீரை காய்ச்சி குடியுங்க; சுகாதாரத்துறை அட்வைஸ்

குடிநீரை காய்ச்சி குடியுங்க; சுகாதாரத்துறை அட்வைஸ்

வால்பாறை; காய்ச்சல் பரவல் அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வால்பாறையில், பருவமழைக்கு பின், காய்ச்சல் பரவல் அதிகமாக காணப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவாலும், இரவு நேரத்தில் கடுங்குளிர் நிலவுவதாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், காய்ச்சல், சளி, தொண்டைவலி, இருமலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, வால்பாறையில் வைரஸ் காய்ச்சல் பரவலால் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் மாறி வரும் சிதோஷ்ண நிலையால், காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவமனைக்கு வர வேண்டும். காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். குளிர்காலம் என்பதால், குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். நோய் தொற்று பரவாமல் தடுக்க 'மாஸ்க்' அணிவது அவசியம்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை