உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மறுபடியும் வெடிகுண்டு மிரட்டல்

 கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மறுபடியும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று, 22வது முறையாக இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு கடந்த சில மாதங்களாகவே இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர் ஒருவர் சாப்ட்வேர் தொழில் நுட்ப யுக்திகளை தவறாக கையாண்டு தொடர்ந்து இ-மெயிலில் மிரட்டல் விடுத்து வருகிறார். மிரட்டல் வரும் போதெல்லாம் போலீசார் மெட்டல் டிடக்டர் மற்றும் மோப்பநாய் சகிதமாக கலெக்டர் அலுவலகத்திலுள்ள ஒவ்வொரு அறையையும் சோதனை செய்து வருகின்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் தேவையற்ற பதட்டம் ஏற்படுகிறது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிறைமதி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தருக்கு இப்பிரச்னையை விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி