உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீண்டும் குண்டு மிரட்டல்; கோவை போலீசார் அதிர்ச்சி

மீண்டும் குண்டு மிரட்டல்; கோவை போலீசார் அதிர்ச்சி

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்துக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, கடந்த மாதம் 26ம் தேதி, இ-மெயில் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் சோதனை நடத்திய போது, புரளி என்பது தெரியவந்தது. அதன் பின், தொடர்ந்து பல்வேறு நாட்களில், ஐந்து முறை இ-மெயிலில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்தனர். ஆனால், மிரட்டல் விடுத்த நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏழாவது முறையாக நேற்றும், கோவை கலெக்டர் ஆபிசுக்கு இ-மெயில் வாயிலாக, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடன், போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதேபோல், பீளமேட்டில் உள்ள தனியார் கல்லுாரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இரண்டு இடங்களில் சோதனை நடத்தியும், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டுபிடிக்க, போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !