உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாஸ்போர்ட் ஆபீசுக்கு  வெடிகுண்டு மிரட்டல்

பாஸ்போர்ட் ஆபீசுக்கு  வெடிகுண்டு மிரட்டல்

கோவை; கோவை --- அவிநாசி ரோடு, தண்டுமாரியம்மன் கோயில் எதிரே, மாநகராட்சி வணிக வளாகத்தில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, இ-மெயிலில் தகவல் வந்தது. போலீஸ் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு எதுவும் இல்லை. சிட்ராவில் உள்ள பாஸ்போர்ட் சேவா மையத்திலும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். நேற்று முன்தினம், கோவை கலெக்டர் அலுவலகத்துக்கும் இதே போல் வெடிகுண்டு மிரட்டல் வந்தது; சோதனையில், அது புரளி என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி