உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலெக்டர் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் 

கலெக்டர் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் 

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு, தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவரது பெயரில் ஒரு கடிதம் வந்தது. ஊழியர்கள் பிரித்து பார்த்தனர்.அதில், கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைப்பதற்கு சிலர் திட்டமிடுவதாகவும், அவர்கள் குறித்த தகவல் தனக்கு தெரியும் என்றும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவர்கள் குறித்த விவரத்தை தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.மோப்ப நாயுடன், வெடிகுண்டு நிபுணர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு அறையாக மெட்டல் டிடெக்டர்களை கொண்டு சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை