மேலும் செய்திகள்
தமிழ்க்கவிஞர் மன்ற முப்பெரும் விழா
17-Feb-2025
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் மார்ச் மாத நிகழ்வு, நுால்கள் வெளியீட்டு விழா, இலக்கிய வட்ட தலைவர் அம்சபிரியா தலைமையில் நடந்தது. அமைப்பின் செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார்.கவிஞர் காளிமுத்து எழுதிய 'புள்ளி வண்டுகள் பிரசவிக்காத காலம்' கவிதை நுாலினை, சிஞ்சுவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி வெளியிட, நுாலாசிரியரின் பெற்றோர் பழனிசாமி, சரஸ்வதி பெற்றுக்கொண்டனர். நுாலினை பாலக்காடு விதை அமைப்பின் தலைவர் கவிஞர் ரமேஷ்குமார் அறிமுகப்படுத்தினார்.கவிஞர் கோகிலா வேலுசாமி எழுதிய, 'வழிப்போக்கனின் பறவைகள்' என்ற ைஹக்கூ நுாலினை, கவிஞர் பிரியா சந்திரன் வெளியிட, கவிஞர் சோலைமாயவன் பெற்றுக்கொண்டார். இளம்படைப்பாளிகள் பங்கேற்ற கவியரங்கம் நடந்தது. சிறார் பாடலாசிரியர் வீராசாமியின் இன்னிசை நிகழ்வு நடந்தது. கவிஞர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
17-Feb-2025