உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தனுார் - மேட்டுப்பாளையம் ரயில் 2 நாட்களுக்கு ரத்து

போத்தனுார் - மேட்டுப்பாளையம் ரயில் 2 நாட்களுக்கு ரத்து

கோவை: கோவை வடக்கு மற்றும் காரமடையில், ரயில் தண்டவாள புதுப்பிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை மற்றும் 27ம் தேதி, மேட்டுப்பாளையம் - போத்தனூர் இடையேயான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.போத்தனூரில் இருந்து, நாளை மாலை 3:30 மணிக்கு புறப்படவிருந்த போத்தனூர் -- மேட்டுப்பாளையம் ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 4:45 மணிக்கு புறப்படவிருந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 27ம் தேதி, மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 1:05 மணிக்குப் புறப்படவிருந்த ரயில் மற்றும் போத்தனூரில் இருந்து மாலை 3:30 மணிக்குப் புறப்படவிருந்த ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ