உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனின் தரம் உயர்கிறது! இனி, புதிய ரயில்களுக்கு பச்சைக்கொடி!

போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனின் தரம் உயர்கிறது! இனி, புதிய ரயில்களுக்கு பச்சைக்கொடி!

கோவை : போத்தனூர் ரயில் நிலையத்தின் வகைப்பாடு என்.எஸ்.ஜி., 4 ஆக உயர்கிறது என்பதால், ஏராளமான வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, புதிய ரயில்கள் இனி, போத்தனூரில் இருந்தும் புறப்படும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.கோவை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனை 'என்.எஸ்.ஜி., 4' பிரிவுக்குள் கொண்டு வருவது நிறைவேறியிருக்கிறது.ரயில் நிலையங்களின் வகைப்பாடு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வருவாயின் அடிப்படையில், மாற்றி அமைக்கப்படுகின்றன.2017-18ம் ஆண்டில், போத்தனூர் ரயில் நிலையம் புறநகர் அல்லாத நிலையம் 5 (என்.எஸ்.ஜி., 5)என வகைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, என்.எஸ்.ஜி., 4 ஆக வகைப்பாட்டுக்கு உயர்த்த, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதையே அதிகாரப்பூர்வ அறிவிப்பாக எடுத்துக்கொள்ள முடியும் என்பதால், என்.எஸ்.ஜி., 4 என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.இதனால், போத்தனூர் ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, ரயில் நிலையம் விரிவடையவும், புதிய வண்டிகள் நிற்கவும், புதிய ரயில்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.இதுதொடர்பாக, போத்தனூர் ரயில் பயணிகள் சங்க தலைவர் முகமது ஷாஹிர் கூறுகையில், “கடந்த 2023---24ம் ஆண்டு, போத்தனூரில் இருந்து, 5.12 லட்சம் பேர் பயணித்துள்ளனர்; 10.42 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. போத்தனூர் ரயில் நிலையம் என்.எஸ்.ஜி., 4வது வகைப்பாட்டுக்கு மாற்றப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட கால போராட்டத்துக்கு பலன் கிடைத்து, எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது,” என்றார்.சேலம் கோட்ட ரயில் பயனாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கூறியதாவது:நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கிறது. இதனால், போத்தனூர் ரயில் நிலையம் விரிவுபடுத்தப்படும். ரயில்களைப் பராமரிக்கத் தேவையான 'பிட் லைன்', தனியாக நிறுத்துவதற்குத் தேவையான 'ஸ்டாப்லிங் லைன்', பராமரிப்புக் கூடம் ஆகியவை ஏற்படுத்தப்படும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பயணிகளுக்கான கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.போத்தனூர் ரயில் நிலையத்தை, கோவையின் இரண்டாவது முனையமாக அறிவிக்கும்போது, இங்கு இருந்தே புதிய ரயில்கள் புறப்படும். தென்மாவட்டங்களுக்கு சில புதிய ரயில் சேவைகள் துவங்க வாய்ப்புள்ளது. வேறு பல ரயில்கள் இங்கு நின்று செல்லவும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.பிட் லைன், ஸ்டாப்லிங் லைன் போன்றவற்றுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kundalakesi
செப் 23, 2024 18:30

எனது அம்மாவினால் ரயிலை விட்டு கீழே இறங்க முடியவில்லை. நடைமேடைக்கும் ரயில் கதவிற்கும் நான்கு அடி உயரம். எப்படி கால் பிரச்னை உடையவர்கள் இறங்கி எற முடியும். இதற்கு தீர்வு உண்டா?


M Ramachandran
செப் 23, 2024 12:44

முன்பு ஒரு காலத்தில் போத்தனுர் வெப்ப நிலை கோவையை விட 2 டிகிரி குறியாவாகா இருக்கும். நிறைய மரங்கள் தோற்காப்புக்கள் இருந்ததன. இது ஆங்கிலேயர் காலத்தில் டவுன்ஷிப் அதாவது ரயில்வே காலனி அதவாது பொன்மலை போல் யேற்பதுதி இருந்தார்கள். நிறைய ஆங்கிலோ இந்தியர்கள் வேலையில் இருந்தார்கள். இப்போர் அந்த சமூகம் என்கேயோ? சிறு வயதில் பள்ளி எள்ளும் பருவத்தில் நான் அங்கு வசித்து வந்ததேன். அப்போது போத்தனுர் டிவிசன் ஹெட் குவார்டர்ஸ். பிறகு ஒளவக்கோடு டிவிசனாக மாரி அந்த ஒளவகோடு ஜங்கஷன் பாலக்காடு ஜங்கஷன்ஆகா மாறி போதானுரிலிருந்து புடுங்கி கேராளாவிற்கு எடுத்து சென்று விட்டனர். இவ்வளவு காலம் போராடி இப்போ சேலம் டிவிசன் வந்திருக்கு. மலையாளிகள் புத்தி சாலிகள். நாம் உட்கார்ந்திருக்கும் இடத்தின் அடியில் நாம் அறியா வன்னம் மண்னை தோண்டி நாம் குழியில் விழும்போது தூரத்தில் நின்று வேடிகை பார்த்து ரசித்து கொண்டிருப்பார்கள். நம் அரசியல் வாதிகள் பணம் கணக்கு பார்த்து கொண்டிருக்கையில் நம் வேட்டியை நாம் அறியும் முன்னர் உருவி விடுவார்கள். இது தான் நம் அரசியல் வாதிகளால் நாம் கண்டா பலன். தமிழ்நாட்டின் ரயிலில் வரும் வசூலை ஆட்டை போட்டு அவர்கள் கேராளாவில் வசூலாகிறமாதி காட்டி சாதித்து கொள்வார்கள்


கத்தரிக்காய் வியாபாரி
செப் 23, 2024 12:06

இதை செய்ய இவ்வளவு காலமா? சேலம் கோட்டம் ஒரு பள்ளு புடுங்கிய பாம்பு என்பதை நொடிக்கு இரண்டுதரம் நிரூபிக்கிறது


நிக்கோல்தாம்சன்
செப் 23, 2024 11:36

பக்கத்து மாநில திருடர் அதிகாரிகள் காட்டில் மழை


சமீபத்திய செய்தி