உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேம்பாலத்தின் கீழே எரியாத மின்விளக்குகள்; மக்கள் திக்திக் பயணம்!

மேம்பாலத்தின் கீழே எரியாத மின்விளக்குகள்; மக்கள் திக்திக் பயணம்!

பஸ் ஸ்டாப்பில் குப்பை

கிணத்துக்கடவு, கோதவாடி பஸ் ஸ்டாப் பகுதியில் மக்கள் அமரும் இருக்கையின் பின்பகுதியில், அதிகளவு பிளாஸ்டிக் குப்பை, காலி மது பாட்டில்கள் கிடக்கிறது. இதனால் குழந்தைகளை அழைத்து வரும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம், உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.-- கார்த்தி, கோதவாடி.

பள்ளமான ரோடு

பொள்ளாச்சி அரசு கல்லுாரி செல்லும் ரோட்டின் நடுவே, பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- மாணிக்கம், பொள்ளாச்சி.

ஒளிராத மின்விளக்கு

கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள மின் விளக்குகள், ஆங்காங்கே எரிவதில்லை. இதனால் ஒரு சில பகுதியில், இரவு நேரத்தில் நடந்து செல்லும் போது மக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், எரியாத மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்.-- ராஜ்குமார், கிணத்துக்கடவு.

மின்பெட்டி சேதம்

கிணத்துக்கடவு, கரியகாளியம்மன் கோவில் வளாகம் அருகே, ரோட்டின் ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் இருக்கும் மின் பெட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த மின் பெட்டியை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும்.-- சசி, கிணத்துக்கடவு.

நெரிசலை கட்டுப்படுத்தணும்!

பொள்ளாச்சி, வெங்கடேசாகாலனி ரோட்டில் அதிகளவு வாகனங்கள், ரோட்டின் இருபுறமும் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. இதை போக்குவரத்து போலீசார் கவனித்து வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும்.- - ரங்கநாதன், பொள்ளாச்சி.

தெருநாய் தொல்லை

உடுமலை பாபுகான் வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் குடியிருப்புகளிலிருந்து கொட்டப்படும் குப்பைக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பாகவே, ரோடு முழுவதும் பரப்பி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. மேலும்,வாகன ஓட்டுநர்களை பகல் நேரத்திலும் துரத்தி சென்று விபத்துக்கு வழிவகுக்கிறது.- கணபதி, உடுமலை.

ரோடு ஆக்கிரமிப்பு

உடுமலை, சரவணா வீதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டுநர்கள் ஏற்கனவே அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ரோட்டின் பாதிவரை கட்டுமான பொருட்களை குவித்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மண் குவியல் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். கனரக வாகனங்கள் வரும்போது ஒதுங்கி செல்வதற்கும் இடமில்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.-ராமதிலகம், உடுமலை.

விபத்து அபாயம்

உடுமலை, பழனியாண்டவர் ரவுண்டானா அருகே வாகனங்கள் அதிவேகமாக வந்து திரும்புகின்றன. வேகத்தடை இல்லாததால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதிவேகமாக வரும் வாகனங்கள் திரும்பும்போது கட்டுபாடில்லாமல் அருகில் செல்லும் பாதசாரிகள் மீதும் மோதுகின்றன. வாகன வேகத்தை கட்டுபடுத்த வேகத்தடை அமைக்க வேண்டும்.- சரன்ராஜ், உடுமலை.

'குடி'மகன்களால் தொல்லை

உடுமலை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம், அனுஷம் ரோட்டில் 'குடி'மகன்கள் இரவு நேரங்களில் நிலையில்லாமல் தாறுமாறாக செல்கின்றனர். இவ்வாறு செல்வதால் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். அப்பகுதியில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால், பெண்கள் அவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.-திருமூர்த்தி, உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை