உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பவுண்டரி தொழிலாளி பஸ் மோதி பலி

பவுண்டரி தொழிலாளி பஸ் மோதி பலி

அன்னுார்; ஒடிசா மாநிலம், மயூர் பஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஹடிபந்து திப்ரியாவின் மகன் சஞ்சய் திப்ரியா, 40. இவர் சில மாதங்களாக கடத்துார் பிரிவில் உள்ள தனியார் பவுண்டரியில் பணிபுரிந்து வந்தார். கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கடத்துார் பிரிவில் நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் சென்ற போது, கோவை நோக்கிச் சென்ற அரசுபஸ் சஞ்சய் திப்ரியா மீது மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த சஞ்சய் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அன்னுார் போலீசார், விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ