சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் பவுலர்கள் அபாரம்
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், நான்காவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., கல்லுாரி மைதானங்களில் நடக்கிறது. எஸ்.ஆர்.ஐ.ஐ., கிரிக்கெட் கிளப் அணியும், எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. எஸ்.ஆர்.ஐ.ஐ., அணியினர், 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து, 209 ரன் எடுத்தனர். வீரர் கணேஷ் பெருமாள், 37 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் சிவசாமி மூன்று விக்கெட் வீழ்த்தினார். எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர், 45.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து, 133 ரன் எடுத்தனர். வீரர் சிவகுமார், 39 ரன் எடுத்தார். எதிரணி வீரர்களான மோகன் குமார் நான்கு விக்கெட்டும், ஹெஜின் பிரகாஷ் மூன்று விக்கெட்டும் வீழ்த்தினர். கோயம்புத்துார் பிரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், சேம் கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின. கோயம்புத்துார் கிரிக்கெட் கிளப் அணியினர், 37.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து, 100 ரன் எடுத்தனர். எதிரணி வீரர்களான நிஷாந்த் மற்றும் ராபின் பாக்ய ராஜா தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். சேம் கிரிக்கெட் கிளப் அணியினர், 23.4 ஓவரில் எட்டு விக்கெட் இழந்து, 101 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் சபரிகுமார் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.