மேலும் செய்திகள்
மதுபாட்டிலால் குத்திய கூலித்தொழிலாளி கைது
14-Apr-2025
கோவை: சமைத்து தரும்படி, பசியில் கேட்டதால் ஆத்திரம் அடைந்து, அண்ணன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய தம்பி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.சுங்கம், சிவராம் நகரை சேர்ந்தவர் பாலமுருகன், 25; கட்டட தொழிலாளி. தனது மனைவி, அண்ணன், சூரியபிரகாஷ், 25 ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், பாலமுருகனுடன் ஏற்பட்ட பிரச்னையில் அவரது மனைவி, சூலூரில் உள்ள அவரது தாய் வீட்டு சென்றார்.இதனால் பாலமுருகன் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், பாலமுருகன் சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சூரியபிரகாஷ், தனக்கு பசிப்பதாக கூறி, விரைவாக சமைக்கும்படி கேட்டுள்ளார்.ஆத்திரம் அடைந்த பாலமுருகன், சூரிய பிரகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, அடுப்பில் கொதித்து கொண்டிருந்த எண்ணெயை எடுத்து, சூரியபிரகாஷ் முகத்தில் ஊற்றினார். முகம் மற்றும் கையில் காயம்பட்ட சூரிய பிரகாஷ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து சூரியபிரகாஷ், ராமநாதபுரம்போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
14-Apr-2025