உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பிரதர்ஹூட் டிராபி கால்பந்து 3 பிரிவுகளில் அசத்திய வீரர்

 பிரதர்ஹூட் டிராபி கால்பந்து 3 பிரிவுகளில் அசத்திய வீரர்

கோவை: கரும்புக்கடையில் உள்ள தனியார் பள்ளியில் இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்கும் நோக்கில் ஏழு வீரர்கள் கொண்ட 'பிரதர்ஹூட் டிராபி' கால்பந்து போட்டி நடந்தது. இரு நாட்கள் நடந்த போட்டியில், 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில், 11, 15, 17 வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜெயேந்திர கால்பந்து அணி, பிளையர் பீட் சாசர் அகாடமி, சி.இ.எல்.எஸ்., அகாடமி ஆகியன முதல் மூன்று இடங்களை வென்றன. அதேபோல், 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் போத்தனுார் சாசர் பள்ளி அணி, டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஜெயேந்திர கால்பந்து அணி ஆகியனவும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் புலியகுளம் எப்.சி., பிளையர் பீட் சாசர் அகாடமி, டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை