பி.எஸ்.என்.எல்., சார்பில் ஊழியர்கள் ஊர்வலம்
கோவை; பி.எஸ்.என்.எல்., துவங்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததன் வெள்ளி விழா ஆண்டு, நேற்று நாடு முழுவதும், சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெள்ளி விழா ஆண்டு முன்னிட்டு, கல்லுாரி மாணவர்களுக்கு இடையே கட்டுரை போட்டி நடத்தி, பரிசு வழங்கப்பட்டது. பின், வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, பி.எஸ்.என்.எல்., ஊழியர்களின் ஊர்வலம், கோவை ரேஸ்கோர்ஸில் நடந்தது.