உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் - பைக் மோதல்; முதியவர் படுகாயம்

பஸ் - பைக் மோதல்; முதியவர் படுகாயம்

வால்பாறை; வால்பாறையில், தனியார் பஸ் மீது பைக் மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்தார். வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி வழியாக, சாலக்குடிக்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வால்பாறையிலிருந்து, சாலக்குடிக்கு செல்லும் போது, ஸ்டேன்மோர் கரும்பாலம் அருகே, பஸ்சும் எதிரே மொபட்டும் மோதின. விபத்தில், மொபட் ஓட்டி வந்த ஜோஸ்,70, பஸ்சின் பக்கவாட்டில்மோதியதில் படுகாயமடைந்தார். இது குறித்து தனியார் பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில், வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ