உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்தில் கால் முறிந்த நபருக்கு  இழப்பீடு தராததால் பஸ் ஜப்தி 

விபத்தில் கால் முறிந்த நபருக்கு  இழப்பீடு தராததால் பஸ் ஜப்தி 

கோவை: விபத்தில் கால் முறிந்த நபருக்கு, இழப்பீடு வழங்க தாமதித்ததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. கோவை, ஒண்டிப்புதுாரை சேர்ந்தவர் பழனிச்சாமி,48. 2016, ஜூலை 2ல் சத்தி ரோடு, குரும்பபாளையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த அரசு பஸ் பழனிச்சாமி மீது, மோதியதில் கால் முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க கோரி, கோவை எம்.சி.ஓ.பி., கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், 16.48 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், 10 லட்சம் ரூபாய் செலுத்தி விட்டு, மீதி தொகை தராமல், அரசு போக்குவரத்துக் கழகம் இழுத்தடிப்பு செய்தது. அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, கோவை - மேட்டுப்பாளையம் செல்ல காந்திபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ், நேற்று ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ