மத்திய சிறையில் வேலை விண்ணப்பிக்க அழைப்பு
கோவை: கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள குன்னுார் கிளைச்சிறையில், காலியாக உள்ள ஒரு சமையலர் பணியிடம், கூடலுார் கிளைச்சிறையில் காலியாக உள்ள ஒரு துாய்மை பணியாளர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் பணியில் 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். துாய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் சான்றிதழ் நகல்களுடன், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர், கோவை - -18 என்ற முகவரியிட்டு, செப்., 1 மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.