மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் பெற அழைப்பு
சூலுார்; சூலுார் வட்டார விவசாயிகளுக்கு, மானிய விலையில், வேளாண் இயந்திரங்கள், வேளாண் பொறியியல் துறை சார்பில் வழங்கப்படுகிறது.சூலுார் வட்டார விவசாயிகளுக்கு, வேளாண் பொறியியல் துறை சார்பில், பவர் டிரில்லர், பவர் வீடர் மற்றும் செல்போன் ஸ்டார்ட்டர் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேலும், சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் பொருத்தவும் அல்லது பழைய மோட்டாரை மாற்ற மானியம் வழங்கப்படுகிறது. தரிசு நிலங்களை உழவு செய்ய மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு வேளாண் பொறியியல் துறை பொறியாளர் வெங்கடாஜலத்தை 92454 65628 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.