மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பொள்ளாச்சி; 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் குறித்து, கோவை கலெக்டர் அறிவித்துள்ளார். அறிக்கையில் கூறியிருப்பதாவது:'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் ஜூலை 15 முதல் நவ., வரை நடக்கிறது. இதில் கோவை மாநகராட்சி பகுதியில் 25 முகாம்களும், நகராட்சி பகுதிகளில் 35 முகாம்களும், பேரூராட்சி பகுதிகளில் 20 முகாம்களும்,கிராம ஊராட்சிகளில் 36 முகாம்களும், புறநகர் ஊராட்சிகளில் 4 முகாம்கள் என, மொத்தம் 120 முகாம்கள் வரும், 15ம் தேதி முதல் ஆக., 14ம் தேதி வரை நடக்கிறது. முகாம்களில் மருத்துவ சேவைக்கான, முகாம்களும் நடத்தப்படுகிறது.இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் வழங்கப்படும். முகாம்களில் பெறும் விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முகாம் தொடர்பாக தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று, முகாம் நடக்கும் நாள், இடம் குறித்து தெரிவித்து, தகவல் கையேடு மற்றும் விண்ணப்பங்களை வழங்குவர். இதில் பங்கேற்று மனுக்களை சமர்பித்து பயனடையலாம்.