உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பறவைகள் கணக்கெடுப்பு தன்னார்வலர்களுக்கு அழைப்பு

 பறவைகள் கணக்கெடுப்பு தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை: 2025—2026ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை இரு கட்டங்களாக நடத்த தமிழக வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பும், இரண்டாம் கட்டமாக நிலப்பரப்பில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் வலசை வரும் பறவைகளின் காலம் பொதுவாக வட கிழக்குப் பருவமழை தொடக்கமான அக்.,ல் துவங்கி, ஏப்., மாதம் வரை நீடிக்கும். எனவே, நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு வரும் 27, 28ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள், மாணவர்கள் கணக்கெடுப்பு துவங்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பதிவு செய்யலாம். ஆனைமலை புலிகள் காப்பகம்: கோவை வனக்கோட்டம் 94456 99100, பொள்ளாச்சி 98940 38965, உடுமலை 95972 66482 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். முதுமலை புலிகள் காப்பகம்: கூடலூர் 83001 26618, மசினகுடி 99524 94420, நீலகிரி 75794 21495, உதகை 94888 12865 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி