சுய உதவி குழு துவக்க அழைப்பு
அன்னுார்; அன்னுார் வட்டார மகளிர் திட்ட மேலாளர் (பொறுப்பு) சுபா வெளியிட்டுள்ள அறிக்கை : சுய உதவிக் குழுக்கள் துவங்குவதன் மூலம் சேமிப்பு பழக்கம் அதிகரிக்கும். குறைந்த வட்டியில் வங்கி கடன் பெற்று சுயதொழில் செய்யலாம். அன்னுார் ஒன்றியத்தில், சுய உதவி குழு துவக்க, பெண்கள், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்டத்தை அணுகலாம். ஆர்வம் உள்ளோர் 75029 54390 எனும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.