மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை..
13-Oct-2025
கோவை: மாநகராட்சி வடக்கு மண்டலம், 20வது வார்டுக்கு உட்பட்ட சத்தி ரோடு, கே.ஆர்.ஜி., நகரில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். அலுவலக வளாகத்தில் தேவையற்ற பொருட்களை, அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்பகுதியில் மோசமான நிலையில் இருந்த ரோடுகளை, உடனடியாக சீரமைக்க அறிவுறுத்தினார். கணபதி தென்றல் நகரில், சாலையோரம் கொட்டப்பட்ட குப்பையை உடனடியாக அப்புறப்படுத்தவும், பொது இடங்களில் குப்பை கொட்டப்படும் இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் அறிவுறுத்தினார். கணபதி மாநகரில், மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும், முதல்வர் படைப்பகம் கட்டுமான பணிகளை, விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்களை அறிவுறுத்தினார். உதவி கமிஷனர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
13-Oct-2025