உழவரைத் தேடி முகாம் இன்று நடக்கிறது
அன்னுார்; பொகலூரில் இன்று 'உழவரைத் தேடி வேளாண்மை' முகாம் நடைபெறுகிறது. தமிழக அரசின் வேளாண் துறை சார்பில், ஒவ்வொரு ஊராட்சியிலும், 'உழவரைத் தேடி, வேளாண்மை,' என்னும் தலைப்பில் முகாம் நடைபெறுகிறது. இந்த வாரம் பொகலூரில், சமுதாய நலக்கூடத்தில் இன்று காலை 10:00 மணிக்கு முகாம் நடைபெறுகிறது.முகாமில் வேளாண் துறை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல், கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். முகாமில் அரசின் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. 'எனவே, விவசாயிகள் முகாமில் பங்கேற்று மானிய திட்டங்கள் குறித்து தெரிந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்,' என வேளாண் அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.