உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கல்லுாரிக்கு கிடைக்குமா கூடுதல் வகுப்பறைகள்?

அரசு கல்லுாரிக்கு கிடைக்குமா கூடுதல் வகுப்பறைகள்?

கோவை:அரசு கலை கல்லுாரியில், புதிதாக கட்டப்பட்ட, 40 வகுப்பறைகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் சுழற்சியில் செயல்பட்டு வந்த, ஆறு துறைகளை சேர்ந்த மாணவர்களின் வகுப்புகள் வழக்கம் போல், முதல் சுழற்சிக்கே மாற்றப்பட்டுள்ளன.கோவை அரசு கலை கல்லுாரியில், 23 இளநிலை, 21 முதுநிலை பிரிவின் கீழ் , 5,500 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு வகுப்பறை பற்றாக்குறை காரணமாக, இரண்டு சுழற்சி முறைப்படி கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் நடந்துவந்தன. கடந்தாண்டு 40 வகுப்பறைகள் கொண்ட, புதிய கட்டடம் திறக்கப்பட்டது.கூடுதலாக, 40 வகுப்பறைகள் கிடைத்ததால், ஆறு துறைகளின் இரண்டாம் சுழற்சி வகுப்புகள் முதல் சுழற்சிக்கே மாற்றப்பட்டுள்ளது.இன்னும் 30 வகுப்பறைகள் கிடைத்தால், இரண்டாம் சுழற்சி முறை முழுமையாக கைவிடப்பட்டு, பிற கல்லுாரிகள் போன்று அனைவருக்கும் ஒரே நேரத்தில் வகுப்புகள் நடத்தப்படும் என்று,கல்லுாரி முதல்வர் உலகி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்