உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீர்ப்புக்கு பிறகு ஜீவனாம்சம் உயர்த்தி கேட்கலாமா?

தீர்ப்புக்கு பிறகு ஜீவனாம்சம் உயர்த்தி கேட்கலாமா?

ஜீவனாம்ச தொகையை ஒரு முறை தீர்மானித்து: கீழமை நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, அந்த உத்தரவில் குறிப்பிட்ட ஜீவனாம்ச தொகை போதுமானதாக இல்லை என்று கருதினால், குடும்ப நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம். அந்த தொகை போதுமானதாக கருதினால், கீழமை நீதிமன்ற உத்தரவில் உள்ள தொகையை பெற்றுக்கொள்ளலாம். சூழ்நிலை மாறுவதாக கருதினால், அப்போது ஜீவனாம்ச தொகையை உயர்த்த கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். ஒரு பெண் திருமணமாகும் போது, என்ன வாழ்க்கை தரம் இருந்ததோ, அதை பராமரிக்க ஜீவனாம்ச தொகையை உயர்த்தலாம் என்று, சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட உயில் செல்லாது என்று வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?: பதிவு செய்யப்பட்ட உயில் செல்லாது என்று, வழக்கு தாக்கல் செய்யலாம். உயில் செல்லாது என்று மனு தாக்கல் செய்யும் நபர், கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை