உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனைவி வேலைக்கு சென்றால் ஜீவனாம்சம் கோர முடியுமா?

மனைவி வேலைக்கு சென்றால் ஜீவனாம்சம் கோர முடியுமா?

குடும்ப பிரச்னை ஏற்படும் போது, கணவன் மீது மனைவி தொடர்ந்து பொய் புகார் கொடுத்தால், விவாகரத்து கேட்டு கணவன் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? கணவன் மீது மனைவி, வன்கொடுமை சட்டத்தின் கீழ் பொய் புகார் கொடுப்பது, கணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகும். ஹிந்து திருமண சட்டப்பிரிவு 13(1) (ஐஏ)ன் கீழ் கொடுமைப்படுத்துதல் ஆகும். இதன் கீழ், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரலாம். குடும்ப தகராறில், கணவன்-மனைவி பிரிந்து விடுகின்றனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி வேலைக்கு செல்கிறார். மனைவி ஜீவனாம்சம் கோர முடியுமா? பி.என்.என்.எஸ்.பிரிவு 144- ன் கீழ், மனைவி வேலைக்கு சென்றால் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது. ஆனால், இரண்டு குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் கேட்கலாம். குடும்ப நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என்று கூறுகிறார்களே... அது உண்மையா? சிவில் கோர்ட் போல, குடும்ப நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வக்காலத்து தாக்கல் செய்ய முடியாது. குடும்ப நீதிமன்ற சட்டம் 1984, பிரிவு 13 ன் படி, வழக்கறிஞர்கள் குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராக தடை உள்ளது. கட்சிகாரர்களுக்கு (கிளைன்ட்) சட்டம் தெரியாது என்பதால், குடும்ப நீதிமன்ற சட்டப்பிரிவு 13(1)ன் படி, நீதிமன்ற முன் அனுமதி பெற்று, 'அமிகஸ்க்யூரி' ஆக மட்டும் வழக்கறிஞர்கள் ஆஜராக முடியும். அந்த அனுமதியை நீதிமன்றம் எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை