மேலும் செய்திகள்
தொடர் மழையால் நொய்யலில் நீர் வரத்து
25-May-2025
கோவை; நொய்யல் ஆற்றுப்படுகையில் மாசுபட்ட தண்ணீர் தேங்குவதால், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் ஏற்படுவதாக, நொய்யல் பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, நொய்யல் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன், கோவை கலெக்டரிடம் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவையிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யலாறு, பேரூர், குனியமுத்துார், வெள்ளலுார், இருகூர், சூலுார், சாமளாபுரம், மங்கலம், திருப்பூர், ஓரத்துப்பாளையம் மற்றும் கரூர் வரை, 168 கி.மீ., துாரம் பயணித்து, இறுதியாக காவிரியில் கலக்கிறது.மேற்குத்தொடர்ச்சி மலையில் துவங்கி, பேரூர் செட்டிபாளையம் சொட்டையாண்டி குட்டைக்கு அடுத்து உள்ள பகுதிகளில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர்,தெலுங்குபாளையம் பிரிவு பகுதியிலுள்ள சாயக்கழிவுகள், தங்கநகை பட்டறைகளிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் நொய்யல் ஆற்றுப்படுகையில் கலக்கின்றன.இதனால் ஆற்றின் இரு புறமும் இரண்டு கி.மீ.,தொலைவுள்ள விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மண், நீரில் புற்று நோய் ஏற்படுத்தும் 'கார்சினோஜேன்ஸ்' எனப்படும் ரசாயனமும் கனிமங்களும் படிந்துள்ளன.இவை தண்ணீர் வழியாகவோ, இந்த தண்ணீரை தாவரங்களுக்கு பாய்ச்சும் போதோ, மனிதன் நேரடியாக பயன்படுத்தும் போதோ, புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்று, சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.தொடர் ஆய்வுகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக காட்மியம், ஹெக்ஸவலன்ட், குரோமியம், நிக்கல், காரியம் ஆர்சனிக், நைட்ரேட், பாஸ்பேட் ஆகியவைஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி, நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.நொய்யலாற்றுப்படுகையில் கழிவுகளை கலக்கச்செய்பவர்கள் மீது, பொது சுகாதாரத்துக்கு குந்தகம் விளைவித்தாக, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
25-May-2025