மேலும் செய்திகள்
குழந்தைகள் நலம் காக்கும் இருதய சிகிச்சைகள்
04-Jul-2025
நீதிமன்றத்தில் இருதய பரிசோதனை முகாம்
13-Jul-2025
கோவை : கே.எம்.சி.எச்., மருத்துவமனையில், பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு, இலவச இருதய ஆலோசனை முகாம் நடக்கிறது.குழந்தைகளுக்கான சிறப்பு இருதய மருத்துவத் துறையில் திறமையும் அனுபவமும் வாய்ந்த டாக்டர் வினோத், சிக்கலான இருதய கோளாறுகள் உட்பட 13,500க்கும் மேலான இருதய அறுவை சிகிச்சைகளை செய்த இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களின் ஒருவரான மூர்த்தி ஆகியோர் இம்முகாமில், தேவையான ஆலோசனைகளை வழங்குகின்றனர்.சுவாசிப்பதில் சிரமம், அடிக்கடி நுரையீரல் தொற்று, உடல் எடை அதிகரிக்காமல் இருப்பது, ஏற்கனவே இருதய சிகிச்சை செய்தது, தோல் நீல நிறமாக மாறுவது, விளையாடும்போது சோர்வு, குடும்பத்தில் யாருக்கேனும் இருதய நோய், மரபணுக் குறைபாடு, பிறவி இருதய கோளாறு முதலான பிரச்னைகள் இருப்பவர்கள், முகாமில் பங்கேற்கலாம்.முகாமில் பங்கேற்பவர்களுக்கு, இலவச மருத்துவ ஆலோசனைத் தவிர பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை சலுகைக் கட்டணத்தில் பெற்றுப் பலனடையலாம். வரும் ஆக.,2ம் தேதி வரை, தினமும் காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை முகாம் நடக்கிறது. மேலும் விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 87548 87568 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
04-Jul-2025
13-Jul-2025