ஜி.கே.என்.எம்.,மருத்துவமனையில் இருதயவியல் எக்கோ பயிலரங்கம்
கோவை; ஜி.கே.என்.எம்.,மருத்துவமனையில் உள்ள இருதய மயக்க மருந்துப் பிரிவு சார்பில், தேசிய அளவிலான, 'இன்ட்ரா ஆப்பரேட்டிவ் டிரான்ஸ் இசோபேகல் எக்கோ' நேரடி பயிலரங்கம் நடந்தது.அதிநவீன உபகரணங்களைக் கொண்டு, மருத்துவ நிபுணர்கள் மூன்று முக்கிய இருதய அறுவை சிகிச்சைகள் பயிலரங்கில் செய்யப்பட்டன.நிகழ்ச்சி அரங்கிலிருந்து, பார்வையாளர்கள் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் உள்ள நிபுணர்களுடன் தொடர்பு கொள்ளும் வசதி செய்யப்பட்டிருந்தது. இதனால் மருத்துவ நிபுணர்கள் பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்றுவிக்கவும், அவர்களின் சந்தேகங்களை உடனடியாகத் தீர்த்து வைக்கவும் முடிந்தது.இத்துறையில் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் சந்திரசேகரன், தீபக் டெம்பே, முரளிதர் காஞ்சி, குமார், தீபக் போர்டே ஆகியோர் பயிலரங்கை வழிநடத்தினர்.ஜி.கே.என்.எம்., தலைமை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி, தலைமை மருத்துவ அதிகாரி மனோகரன், இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் சந்திரசேகர், இருதய மயக்க மருந்து ஆலோசகர் கார்த்திக் பாபு மற்றும் தலைமை மருத்துவர்கள் பங்கேற்றனர்.