/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேஸ்புக்கில் ஹிந்து அவமதிப்பு கருத்து பதிவிட்டவர் மீது வழக்கு
பேஸ்புக்கில் ஹிந்து அவமதிப்பு கருத்து பதிவிட்டவர் மீது வழக்கு
கோவை: பேஸ்புக்கில், ஹிந்து அமைப்புகளை அவமதிக்கும் வகையில், கருத்து பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, உக்கடம் பகுதியை சேர்ந்த அக்பர் என்ற பாய்சன் என்பவர், 'அக்பர் அக்பர்' என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் துவங்கி, மத சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்களை போஸ்ட் செய்துள்ளார். அதில், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளை அவமதிக்கு ம் வகையில் கருத்துக்கள் பதிவிட்டுள்ளார். இது போன்ற பதிவுகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதோடு, இரு பிரிவினர் இடையே பதட்டமான சூழ்நிலை உருவாக்கும் என்பதால், அக்பர் மீது, உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 'அக்பர் அக்பர்' என்ற பேஸ்புக் கணக்கை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.