உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடைகள் நடமாட்டம்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்

கால்நடைகள் நடமாட்டம்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்

வால்பாறை; வால்பாறை நகரில், உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரில், சமீப காலமாக கால்நடைகள் அதிகளவில் ரோட்டில் உலா வருகின்றன. ரோட்டில் ஏற்கனவே ஆக்கிரிமிப்பு கடைகளாலும், சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதாலும், மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், கால்நடைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது.சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ரோட்டில் கட்டுப்பாடின்றி சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி