சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்
கோவை: தி.மு.க. தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சி.பி.எஸ்.ஒழிப்பு இயக் கத்தினர் நேற்று ஆர்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை நடந்த ஆர்பாட்டத்துக்கு சி.பி.எஸ்., இயக்க மாவட்ட நிதிக்காப்பாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார். தி.மு.க., தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் சி.பி.எஸ். திட்ட ஊழியர்களுக்கு வழங்குவது போல் பணிக்கொடை, குடும்பஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி சி.பி.எஸ்.ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறியலுக்கு முயற்சித்த பத்து பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிக் அலி, குணசித்ரா, முத்துமனோஜ், நவீன்குமார், கிருஷ்ணன், தினேஷ்யாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.