சி.டி.சி.ஏ. டிவிஷன் கிரிக்கெட்: சன் ஸ்டார்-ஆர்.கே.எஸ். வெற்றி
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், ஐந்தாவது டிவிஷன் போட்டி எஸ்.ஆர்.ஐ.ஐ., சி.சி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. சன் ஸ்டார் அணியும், சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த சன் ஸ்டார் அணியினர், 50 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 299 ரன் எடுத்தனர். வீரர்கள் லக்ஷிமிகாந்த், 78 ரன், சந்திர சேகரன், 61, பிரவீன்குமார், 48 ரன், தமிழ் அரசு, 33 ரன் எடுத்தனர். அடுத்து விளையாடிய சீஹாக்ஸ் அணியினர், 47.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 215 ரன் எடுத்தனர். வீரர்கள் ஹர்ஜித், 74, காளிங்கராஜ், 37 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் கணேசன் நான்கு விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது டிவிஷன் போட்டியில் திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியும், ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் நிறுவன கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் அணியினர், 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 248 ரன் எடுத்தனர். வீரர்கள் திகிஷ், 62 ரன், ரித்விக், 48 ரன், கருப்பசாமி, 38 ரன், மாடசாமி, 33 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் சத்யன் மூன்று விக்கெட் வீழ்த்தினார். திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியினர், 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 141 ரன் எடுத்தனர். வீரர் ராகவன், 46 ரன் எடுத்தார். எதிரணி வீரர் ராகுல் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.