சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் மழையால் அணிகள் ஏமாற்றம்
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) மூன்றாவது டிவிஷன் போட்டி ஸ்ரீ சக்தி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடந்துவருகிறது. கோவை காம்ரேட்ஸ் அணியும், ஸ்ரீ சக்தி ஐ.இ., மற்றும் டெக்., கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.பேட்டிங் செய்த, கோவை காம்ரேட்ஸ் அணியினர், 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 104 ரன்கள் எடுத்தனர். வீரர் ராஜ்குமார் அதிகபட்சமாக, 32 ரன்கள் விளாசினார். அப்போது மழை குறுக்கிட போட்டி நிறுத்தப்பட்டது.ஐந்தாவது டிவிஷன் போட்டியில், வசந்தம் கிரிக்கெட் கிளப் அணியும், சன்ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. மழை காரணமாக, 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பேட்டிங் செய்த வசந்தம் கிரிக்கெட் கிளப் அணியினர், 40 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 126 ரன்கள் எடுத்தனர்.வீரர் கோபிநாத், 36 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் அரவிந்த்குமார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய சன்ஸ்டார் அணியினர், 36.1 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 127 ரன்கள் எடுத்தனர். வீரர் கார்த்திக், 31 ரன்கள் எடுத்தார்.அதேபோல், சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், அக்ஷயா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும் மோதின. பேட்டிங் செய்த சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர், 24 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 113 ரன்கள் எடுத்தனர். வீரர் ஜெரிஷ், 36 ரன்கள் எடுத்தார். அப்போது மழை குறுக்கிட போட்டி நிறுத்தப்பட்டது.