உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சி.டி.சி.ஏ., முதல் டிவிஷன் 5 விக்கெட் வீழ்த்திய வீரர்

 சி.டி.சி.ஏ., முதல் டிவிஷன் 5 விக்கெட் வீழ்த்திய வீரர்

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், முதல் டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியும் மோதின. ஜாலி ரோவர்ஸ் அணியினர் 50 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்தனர். வீரர்கள் அகிலேஷ்வர் 83, கவுசிக் 54 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் சம்ரித் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். ராமகிருஷ்ணா அணியினர் 44 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்தனர். வீரர் வினய் 52 ரன் எடுத்தார். எதிரணி வீரர்களான ராகுல், ஸ்ரீநாத் ஆகியோர் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை